ஒரு அதிகாலை அடைமழையில் ..
அரைகுறை தூக்கத்தில்..அலாரத்தை
ஐந்து ஐந்து நிமிடங்கள் நகர்த்தி..நகர்த்தி..
கடைசியாக கண்விழித்தேன் அலாரத்தின் ..
தொடர் அழுகையால் அரைமணிநேரம் கழித்து ...
அவசரமாய் ஐஸ் தண்ணியில் குளித்து ..
அவதியாய் பேருந்தில் ஏறினால்.. மெதுவாய்
அது தள்ளாடி தள்ளாடி பாடலுடன் கல்லூரி
வாசல் வந்தது மழைக் காற்றை கிழித்துக்கொண்டு ..
எப்படியோ சிக்கி முனங்கி வெளியே வந்து ..
மழையில் நனைந்தபடி கல்லூரி போனால் ..
அங்கே சொன்னாங்க அன்று கல்லூரி..
மழைக்கால விடுமுறையாம்..:-( :-)
என்னத்த நான் சொல்ல..
காலையில தூக்கம் போச்சே! ..:-)