நடைபாதை சாலைகளில்
நான் கடக்கும் முகங்களில்..
ஏதோ ஒரு முகம் ..
உன் சாயலாய் தோன்றும்போதும் ..
நான் தினம் கேட்கும் ஒலிகளில்.
ஏதோ ஒரு ஒலி..
உன் பெயராய் ஒலிக்கும்போதும் ..
நிதம் நான் கேட்கும் பாடல்களில்
ஏதோ ஒரு பாடல்..
உன் ரசனையாய் அமையும்போதும் ..
நான் என்ன செய்ய ?
புன்னகை தவிர..:-)