முகம் பார்க்க மறுக்கும் நம் கண்களுடன்
வலம் வருகிறோம் நீயும் நானும் ஒரே வீட்டினுள்..
எதிரெதிரே அருகே அமர்ந்து இருப்பினும்
மௌனங்கள் மட்டும் பாஷைகள் ஆயின ..
தேவைபட்டால் ஆம் இல்லை வார்த்தைகளுடன்
முடிந்து விடுகின்றன நமது உரையாடல்களும்..
அரிதாரம் பூசாமலே நீயும் நானும் ..
நடிகர்கள் ஆனோம் மற்றவரின் முன்னால்..
பிரியம் இல்லாமல் பிரியாமல் இருக்கிறோம்
பிரியமான நம் பிள்ளைகளுக்காக..